ஊராட்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணா சிலை அருகே ஏ ஐ டி யு சார்பில் ஊராட்சி மாவட்ட பஞ்சாயத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

அரியலூர், மார்ச் 30- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே ஏஐடியுசி}யின் மாவட்ட பஞ்சாயத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தூய்மைப் பணியாளர், காவலர் மற்றும் ஓஎச்டி ஆப்ரேட்டர்கள் ஆகியோருக்கு கரோனா கால ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊதியத்தை உயர்த்தித் தரவேண்டும். இபிஎப், ஈஎஸ்ஐ ஆகியவற்ற அமல்டுத்த வேண்டும். ஊராட்சிகளில் காலியாக உள்ள மேற்கண்ட பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கிராம ஊராட்சி தொழிலாளர்களுக்கு 7 ஆவது ஊதியக் குழு நிர்ணயித்த ஊதியம் மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள், தளவாட சாமான்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் தனசிங் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வனிதா, ஏஐடியுசி பணியாளர் சம்மேளன மாநிலச் செயலர் தண்டபாணி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலர் கிருஷ்ணசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், சங்கச் செயலர் கு,வனிதா, சங்கத் துணைத் தலைவர் த, ராமசாமி, சங்க துணைச் செயலர் ஜெயசித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.பின்னர் அனைவரும் ஊராட்சிகள் உதவி இயக்குநரை சந்தித்து மனு அளித்தனர்.