பைக்குகள் மோதல் பெண் படுகாயம்

குளச்சல்;

Update: 2025-03-30 06:32 GMT
குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி ராஜன் என்பவர் மனைவி மேரி பிரபா (45). இவர் நேற்று ரீத்தாப்புரம் - குளச்சல் சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். இரும்புலி என்ற பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்  அருகே செல்லும்போது பின்னால் வந்த பைக் ஒன்று மேரி பிரபாவின் ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது        இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மேரி பிரபாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற பைக் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News