ராமநாதபுரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது

அமிர்த வித்யாலயம் பாலர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது;

Update: 2025-03-30 07:23 GMT
  • whatsapp icon
ராமநாதபுரம் மாவட்டம்ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் CBSE மேல் நிலைப் பள்ளியில் பால புரஸ்கார் திவாஸ் எனப்படும் பாலர் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவானது பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ராமேஸ்வரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாந்தமூர்த்தி அவர்களும் தங்கமணி பர்னிச்சர் நிறுவனர் விஜய கிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி பாராட்டி பேசினார்கள் பெற்றோர்கள் . ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அமிர்த வித்யாலயம் பள்ளி முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News