கருங்கல் அடுத்த கப்பியறை பி கிராமத்துக்கு உட்பட்ட வட்ட விளை பகுதியில் அனுமதி இன்றி மணல் குடோன் இயங்கி வருவதாக குமரி மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. கலெக்டர் உத்தரவின் பேரில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். இதில் வட்ட விளை பகுதியில் கருங்கல், பாலூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இன்றி எம் சான்ட், ஜல்லி சேமிப்பு குடோன் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது கப்பியறை பி கிராம நிர்வாக அலுவலர் ஹெலன் தங்கானி (58) என்பவர் அளித்த புகார் பேரில் சசிகுமார் மற்றும் நில உரிமையாளர் முருகானந்தம் என்ற சாம்ராஜ், அவரது மனைவி சசிகலா ஆகியோர் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.