கிம்ஸ் மருத்துவமனையில் இப்தார் விருந்து

நாகர்கோவில்;

Update: 2025-03-30 12:01 GMT
கிம்ஸ் மருத்துவமனையில்  இப்தார் விருந்து
  • whatsapp icon
நாகர்கோவில் சுங்கான்கடையில் கிம்ஸ் மருத்துவமனை கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து வகை நோய்களுக்கும் 25-க்கும் மேற்பட்ட சிறப்பு துறைகளுடன், 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்களால் அதிநவீன தொழில் நுட்ப கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகையை ஒட்டி இப்தார் விருந்தும் , அதை தொடர்ந்து கிம்ஸ் டாக்டர்கள் , ஊழியர்கள் மறறும் கட்டுமான ஊழியர்களுக்கு பாராட்டு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிம்ஸ் குழும தலைவர் டாக்டர் எம்.ஐ. சஹத்துல்லா தலைமை வகித்தார். நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் கட்டிட வல்லுநர்களுக்கும், தொடர்ந்து கிம்ஸ் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டு பரிசுள் வழங்கப்பட்டது. விழாவில் குவாலிட்டி கேர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஹரிபிரசாத், எம்.எல்.ஏ.க்கள் மனோதங்கராஜ், தாரகை கத்பர்ட், பிரின்ஸ், எம்.ஆர். காந்தி, நாகர்கோவில் மேயர் வக்கீல் மகேஷ், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், குளச்சல் ஏ.எஸ்.பி. பிரவீண்,வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தாணு வரவேற்றார். இதில் அரசு அதிகாரிகள், மதத்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், கிம்ஸ் திருவனந்தபுரம் முதுநிலை ஊழியர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Similar News