உதகையில் நடந்த தவக்கால பரிகார பவனியில்,
தில்லானா பக்தர்கள் கலந்து கொண்டனர்;
உதகையில் நடந்த தவக்கால பரிகார பவனியில், சிலுவையை 7 கிலோ மீட்டர் தூரம் சுமந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். உலகில் அமைதி நிலவ, கொடிய நோய்கள் உலகை விட்டு அகலவும் , பொது தேர்வு எழுதும் மாணவர்களுகாகவும் சிறப்பு பிரார்த்தனை மேற்க்கொள்ளப்பட்டது... கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ‘ஈஸ்டர்’ பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் தவக்காலத்தை கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின், 4-வது ஞாயிற்று கிழமையான இன்று உதகை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளின் நினைவாக, சிலுவையை சுமந்தும், பக்தி பாடல்கள் மற்றும் ஜெபங்களுடன் தவக்கால பரிகார பவனி நடைப்பெற்றது. உதகை இருதய ஆண்டவர் தேவாலயத்தில் துவங்கிய இந்த பவனி, மருத்துவமனை சாலை, கூட்ஷெட், மேரீஸ்ஹில், ரோகிணி, காந்தல் வழியாக 7 கிலோ மீட்டர் தூரம் சிலுவையை சுமந்து குருசடி திருத்தலத்தை அடைந்தது. அங்கு மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. குறிப்பாக உலகில் அமைதி நிலவ, கொடிய நோய்கள் உலகை விட்டு அகலவும் , பொது தேர்வு எழுதும் மாணவர்களுகாகவும் சிறப்பு பிரார்த்தனை மேற்க்கொள்ளப்பட்டது.