உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வு
ஆ.இராசா எம்.பி., அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்;
உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆ.இராசா எம்.பி., அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஆய்வு. நீலகிரி மாவட்டத்தில், 6.4.2025 ஞாயிற்றுக்கிழமை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கழக துணை பொதுச்செயலாளர் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்களும், மாவட்ட பொறுப்பு அமைச்சர், தமிழ்வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள், மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், உதகை நகர செயலாளர் ஜார்ஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.