திமுக மாணவர் அணி கூட்டம்
உதகையில் ஆ.இராசா எம்.பி., அவர்கள் தலைமையில் நடைபெற்றது;

திமுக மாணவர் அணி கூட்டம் உதகையில் ஆ.இராசா எம்.பி., அவர்கள் தலைமையில் நடைபெற்ற நீலகிரி மாவட்டம், உதகை மொனார்க் நட்சத்திர ஹோட்டலில் கழக துணை பொதுச்செயலாளர் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் தலைமையில் "திமுக மாணவர் அணி" மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் ராஜீவகாந்தி வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் மற்றும் மாநில துணை செயலாளர்கள் மன்னை சோழராஜன், சேலம் தமிழரசன், அதலை செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், ஆனந்த், கோகுல், வீரமணி, ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் தொடர்ந்து 7வது முறை கழக அரசு அமைந்திட மாணவர் அணியினர் அயராது உழைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.