உதகையில் சித்திரைத் தேர் திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்;
உதகையில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது இதில் 14ஆம் நாள் இன்று அம்மனின் திரு வீதி உலா நடைபெற்றது இதில் காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மாவிளக்கு பூஜை மற்றும் விளக்கு பூஜை என அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றது மேலும் அம்மனின் அலங்கார செய்து சிறப்பு வழிபாடு ஆடல் பாடல் உடன் துவங்கிய அம்மனின் திருவீதி உலா பொதுமக்கள் சூழ உதகையின் முக்கிய வழி விதி வழியாக அம்மனின் திருவீதி உலா புறப்பட்டு சென்றது பின்பு உதகை மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் மாரியம்மன் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்