ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவால் விலை உயர்வு கருப்பு அவரை-ரூ.120, பீன்ஸ்-ரூ.100-க்கு விற்பனைஈரோடு, மார்ச். 30- ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது கோவில்களில் விசேஷம் மற்றும் சுப முகூர்த்தம் தொடர்ந்து வருவதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.இதனால் ஒவ்வொரு நாளும் காய்கறிகள் விலை கூடுவதும், குறைவதும் என நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வ.உ.சி. மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த வாரத்தை விட நாட்டு காய்கறிகள் விலை இன்று உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்திரிக்காய் இன்று ரூ.50-க்கு விற்பனையானது. கடந்த வாரம் கருப்பு அவரை ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையான நிலை யில் இன்று ஒரு கிலோ ரூ.120 ஆக உயர்ந்த விற்பனையானது. நாட்டு காய்க றிகள் கடந்த வாரத்தை விட இன்று விலை உயர்ந்து விற்பனையானது. இதேபோல் கடந்த வாரம் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் இன்று ஒரு கிலோ ரூ.100 ஆக உயர்ந்து விற்பனையானது.வ.உ.சி. மார்க்கெட்டில் இன்று விற்கப்பட்ட மற்ற காய்கறிகளின் விலை கிலோ வில் வருமாறு:- வெண்டைக் காய்-40, கொத்தவரங்காய் 40, பீர்க்கங்காய்-50, பாக ற்காய்-40, புடலங்காய்-40, சுரக்காய்-10, முருங்கைக்காய்-30, பட்ட அவரை-80, கேரட்-45, பீட்ரூட்-45, முள்ளங்கி-25, பச்ச மிளகா -40, பச்சை பட்டாணி-80, உருளைக் கிழங்கு-35, நெல்லிக்காய்-80, கருணைக் கிழங்கு-100, கோவக்காய்-30, சவ்சவ்-25, இஞ்சி-70, பூசணிக்காய்-10, காலி பிள வர்-20, தக்காளி-10-15, சின்ன வெங்காயம்-35, பெரிய வெங்காயம்-35, தேங்காய்-45. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது கோவி ல்களில் தொடர் விசேஷம், முகூர்த்த நாள் இது போன்ற காரணங்களால் காய்கறி களின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து காணப்படுகிறது என்றனர்.