தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை-மகன் உயிரிழப்பு.
தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை-மகன் உயிரிழப்பு.;

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டிடத் தொழிலாளி முனிரத்னம் (32). இவரது மகன் சந்தோஷ் குமார் (11) 6-ம் வகுப்புப் படித்து வருகிறான் மற்றும் கலைச்செல்வன் என 2 மகன்கன் உள்ளனா். இந்த நிலையில் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக முனிரத்னம் தனது இரு 2 மகன்ளுடன் அங்குள்ள தொட்டூா் பகுதியில் வெங்கடேசப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நீா் சேமிப்புக் குட்டைக்குச் சென்றார். அப்போது முனிரத்னமும், அவரது மகன் சந்தோஷ் குமாரும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினா். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 2 பேரும் உயிரிழந்தனா். தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.