ஆரணி அரசு மருத்துவமனை தனியார் ஒப்பந்த பணியாளர்கள் 2 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு.

ஆரணி அரசு மருத்துவமனையின் தனியார் ஒப்பந்ததாரர்கள் இரண்டு பேர் மீது ஆரணி மகளிர் நிலைய போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.;

Update: 2025-04-03 08:09 GMT
ஆரணி அரசு மருத்துவமனை தனியார் ஒப்பந்த பணியாளர்கள் 2 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு.
  • whatsapp icon
ஆரணி, ஆரணி அரசு மருத்துவமனையின் தனியார் ஒப்பந்ததாரர்கள் இரண்டு பேர் மீது ஆரணி மகளிர் நிலைய போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். ஆரணி அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணி, சமையலர், எலக்ட்ரிக், தோட்ட வேலை, நோயாளிகளின் துணி துவைத்தல் ஆகிய பணிகளுக்கு வேலூர் சேர்ந்த சுமித் தனியார் ஒப்பந்ததாரரை டெண்டர் மூலம் விடப்பட்டு பணி செய்யப்பட்டு வருகிறது. இதில் மேனேஜராக பிரேம்குமார் என்பவரும், மேற்பார்வையாளராக லோகநாதன் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆரணி அடுத்த சம்புவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மனைவி சுதா(42) என்பவர் ஆரணி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளாக சுமித் ஒப்பந்ததாரர் மூலம் சமையலராக பணிபுரிந்து வருகிறார். மேலும் சுமித் மேலாளர் பிரேம்குமார், மேற்பார்வையாளர் லோகநாதன் ஆகிய இருவரும் அடிக்கடி என்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பிரேம்குமாரும், லோகுவும் சேர்ந்து எனக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்தனர். பின்னர் சமையல் வேலையிலிருந்தும் நீக்கினர். இதன் காரணமாக ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் ஆரணி அரசு மருத்துவமனை சமையலர் சுதா என்பவர் சுமித் மேலாளர் பிரேம்குமார், மேற்பார்வையாளர் லோகநாதன் மீதும் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது, ஆரணி அரசு மருத்துவமனையில் நான் 15 வருடங்களாக சமையலராக பணிபுரிந்து வருகிறேன். சுமித் மேலாளர் பிரேம்குமார், மேற்பார்வையாளர் லோகநாதன் என்பவரும் என்னையும், மேலும் பலரையும் பாலியல் வன்கொடுமை செய்து வருவதும் வழக்கமாகக் கொண்டு வந்தனர். அதனையும் மீறி கேட்டால் அவர்களை வேலையை விட்டு நிறுத்துவது, சம்பளம் கொடுக்காமல் அலைக்கழிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு கிடைக்க வேண்டிய இரண்டு மாத சம்பளமும் மீண்டும் நான் மீண்டும் பணிபுரிய பணியமர்த்த வேண்டும் இன்று புகார் கொடுத்தார். ஆரணி மகளிர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து சுமித் மேலாளர் பிரேம்குமார் மற்றும் மேற்பார்வையாளர் லோகநாதனையும் தேடி வருகின்றனர்.

Similar News