மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்;

Update: 2025-04-03 08:05 GMT
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
  • whatsapp icon
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ்& கம்யூனிகேஷன் துறை சார்பில் கிராமங்களில் செயற்கை நுண்ணறிவின் நிலைத்தன்மை மற்றும் இணையத்தின் பங்கு குறித்து இரண்டு நாள் கருத்தரங்கம். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் துறை சார்பில், கிராமப்புறங்களில் செயற்கை நுண்ணறிவின் நிலைத்தன்மை மற்றும் இணையத்தின் பங்கு குறித்து இரண்டு நாள் கருத்தரங்கம் கல்லூரியின் மத்திய நூலக அரங்கில் நேற்று காலை தொடங்கியது இக்கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராஜா, டீன் ராமசாமி, துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அலுவலர் சதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் மாலதி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் சிக்னல் மற்றும் படக்குறிப்பு செயலாக்க தலைமை செயல் அதிகாரி பிரியங்கா கோக்கில், சென்னை அண்ணா பல்கலைக்கழக தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர் பி.வரலட்சுமி, வேலூர் தொழில்நுட்ப கல்லூரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சுஜாதா ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவின் நிலைத்தன்மை மற்றும் இணையத்தின் பங்கு குறித்து மாணவ மாணவிகளிடையே பேசினர். இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் சிறந்த கட்டுரையை கல்லூரி முதல்வர் ராஜா தேர்ந்தெடுத்து பரிசு இரண்டாவது நாளாக இன்று காலை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் வழங்க உள்ளார். நிகழ்ச்சி இறுதியாக பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூற உள்ளார்

Similar News