ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-03 08:38 GMT
  • whatsapp icon
தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் 8-வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய உயர்வை தடுக்க சட்ட திருத்தம் கண்டித்து இந்திய தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலக முன்பு இன்றுஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 25.03.2025 அன்று நிதி மசோதாவுடன் இணைத்து பென்சனர் உரிமைகளை பறிக்கும் மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் மட்டுமே உண்டு. அதாவது நாடாளுமன்ற விவாதத்தை முடக்கி நிதி மசோதா என்னும் பெயரில் பென்சனர்களின் உரிமைகளைப் பறிப்பது மட்டுமே அரசின் நோக்கம் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி அரசு மசோதாவை நிறைவேற்றிவுள்ளது. நிறைவேற்றப்பட்ட இம் மசோதா மூலம் அரசு 17.12.1982-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறுதலிப்பதே அரசின் நோக்கம். 8-வது ஊதியக்குழுவின் பயன்களை பழைய பென்சன்தாரர்களுக்கு வழங்காமல் மறுக்கும் நோக்கிலேயே அரசு நாடாளுமன்றத்தில் இம் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. இன்று மத்திய அரசின் ஓய்வூதியர்களுக்கு என்ன நிகழுமோ அதேதான் மாநில அரசு மற்றும் மாநில அரசு சார்ந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் நிகழும். எனவே இச்சட்டம் திருத்தத்தை ஒன்றிய அரசு வாபஸ் பெறக் கோரி தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு. தலைமை. D.பாஸ்கரன், மாவட்ட தலைவர், ஒருங்கிணைப்பு மற்றும் விளக்கவுரை P.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர், கண்டன உரையாக தோழர் K.குப்புசாமி, மாநில இணை செயலாளர், வாழ்த்துரையாக மாவட்ட செயலாளர், BSNL ஊழியர் சங்கம் கிருஷ்ணன் நன்றி உரை மாவட்ட செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.

Similar News