அருமனை : இந்து கடவுள்களை அவதூறு

நள்ளிரவில் குவிந்த பா ஜ க வினர்;

Update: 2025-03-31 03:11 GMT
அருமனை : இந்து கடவுள்களை அவதூறு
  • whatsapp icon
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள புண்ணியம் சந்திப்பு பகுதியில் நேற்று இரவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் பேசிய நபர் ஒருவர் இந்து கடவுள்களை மிகவும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்த பொதுக்கூட்ட மேடை அருகில் பாரதிய ஜனதா வினர் மற்றும் பொதுமக்கள் புகுந்து மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் மிகப் பெரிய பரபரப்பப்பட்டது.       இதை எடுத்து அந்தப் பகுதி பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் அருமனை போலீஸ் நிலையம் முன்பு நள்ளிரவில் குவிந்தனர் அவதூறு பேசிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு மனு புகார் மனு அளித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இன்று 31-ம் தேதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.இதையடுத்து பாரதிய ஜனதாவினர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News