
தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் (68). இவர் சிலம்பாட்ட வீரர் மட்டுமன்றி வர்ம கலை ஆசான் ஆவார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதை அவரது மனைவி ராணி பொன் குமாரி மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று தனது மனைவிக்கு போன் செய்த சாம்ராஜ், தான் சரல் விளை பகுதியில் உள்ள தோப்பில் இருப்பதாகவும், எல்லாம் முடிந்துவிட்டது என கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். இதை அடுத்து ராணி பொன்குமாரி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு சாம்ராஜ் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் சேம்ராஜ் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. மது குடிப்பதை கண்டித்ததால் சாம்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.