
தென் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றான கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நாளை காலை முதல் நடக்கிறது. இதற்கு ஆயத்தமான வண்டி ஓட்டம் என்ற நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. நாளை காலை வழக்கமான பூஜைகள் முடித்து அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருள தூக்க நேர்ச்சை காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் 1166 குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். கோவிலில் தங்கி இருந்து விரதம் மேற்கொண்டு வரும் 1200 தூக்க காரர்களும் நேர்ச்சையில் பங்கேற்க உள்ளனர். காலையில் துவங்க நேர்ச்சையானது நள்ளிரவு வரை நடக்கிறது. இதுபோன்று நேற்று காலை வழக்கமான பூஜைகள் முடிந்து தூக்கக்காரர்கள் உருள் நேர்ச்சையில் ஈடுபட்டனர்.