தளி அருகே தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.
தளி அருகே தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.;

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்க அழகப்பா. இவருடைய மகன் நக்கலய்யா (36). இவர், ஓசூர் அருகே தாசனபுரத்தில் தனது மனைவி நாகரத்திரா (28) 2 மகன்கள் ஆகியோர் யுகாதி பண்டிகைக்காக நக்கலய்யா தனது மனைவி குழந்தைகளுடன் லட்சுமிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தைகள் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். இது நக்கலய்யாவின் அண்ணன் சின்னைய்யா (38) குழந்தைகள் சேட்டை செய்வதாக கூறி திட்டி கண்டித்துள்ளார். அவரை நக்கலய்யா சின்னைய்யாவை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நக்கலய்யாவை அங்கு வந்து மதியம் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த தளி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் தப்பி ஓடிய சின்னைய்யாவை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.