சிங்கம்புணரியில் கோவிலுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்

சிங்கம்புணரி கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு தெலுங்கு மக்கள் பால்குடம் எடுத்தனர்;

Update: 2025-04-01 07:54 GMT
சிங்கம்புணரியில் கோவிலுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்
  • whatsapp icon
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தெலுங்கு பேசும் மக்கள் கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். முன்னதாக சீரணி அரங்கம் பகுதியில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தி பரவசத்துடன் வலம் வந்து கன்னிகா பரமேஸ்வரி கோவிலை அடைந்தது. அங்கு அருள் பாலிக்கும் அன்னை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரிக்கு பாலால் அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான தெலுங்கு பேசும் மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Similar News