சிவகங்கையில் பாலாம்பிகை சிலை பிரதிஷ்டை - ஏராளமானோர் பங்கேற்பு

சிவகங்கையில் புதிதாக பாலாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர்;

Update: 2025-04-01 10:11 GMT
சிவகங்கையில் பாலாம்பிகை சிலை பிரதிஷ்டை - ஏராளமானோர் பங்கேற்பு
  • whatsapp icon
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் மானாமதுரை சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வில்வபுரீஸ்வரர் திருக்கோவிலில் புதிதாக ஸ்ரீ பாலாம்பிகை உற்சவர் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மிகப் பழமையான இத்திருக்கோவிலில் சிவபெருமான் வில்வபுரீஸ்வரராக சிவலிங்கமாகவும், சுதை சிற்பமாகவும் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் புதிதாக உபயமாக பாலாம்பிகை உற்சவர் சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக உற்சவர் பாலாம்பிகைக்கு புது பட்டு சேலை அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் நேர்த்தியாக அமர்ந்து மங்கல பொருட்கள் மற்றும் பாலாம்பிகை திரு உருவ படங்களை வைத்து அம்மனின் மந்திரங்கள் கூறி வழிபாடு செய்தனர். நிறைவாக குங்குமத்தால் அர்ச்சனைகள் செய்து தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Similar News