ராமநாதபுரம் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
ஆட்டோ ஓட்டுனர்கள் 'திடீர்' வேலைநிறுத்தம் கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதி.;
ராமேசுவரத்தில் இன்று போலீசாரை கண்டித்துlராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு நாள்தோ றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்க ணக்கான சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஆட்டோகளில் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ராமர் பாதம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து செல் கின்றனர். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி ஐதராபாத் பகு தியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களில் பயணம் செய்து சுற்றி பார்த்த பின்னர் ஆட்டோ ஓட்டுநர்கள் பேசிய பணத்தை கொடுக்காமல் குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஐதராபாத் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஐதரா பாத் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் இரண்டு பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அதே போன்று ஆட்டோ ஓட்டுனர் கொடுத்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகியையும் போலீசார் தகாத வார்த்தையால் பேசி ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய ஆந்திரா வைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஒருதலை பட்சமாக செயல்பட்ட போலீசாரை கண்டித்தும் ராமேசுவரத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்கங்களும் இன்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் 2000-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்காமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படு வது மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகள் னிகள் ஆட்டோக்கள் கிடைக்காமல் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டனர். மேலும் ஆட்டோ இயங்காததால் அன்றாட வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவி கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.