புதுப்பிக்கப்பட்ட அரசு மருத்துவமனையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லஷ்மி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தா
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்;
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மைக்ரோ லேண்ட் பவுண்டேஷன் சார்பாக புதுப்பிக்கப்பட்ட அரசு மருத்துவமனையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லஷ்மி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனையை தனியார் தொண்டு நிறுவனமான மைக்ரோ லேண்ட் பவுண்டேஷன் ரூபாய் 8 கோடி செலவில் புதுப்பித்தது இதில் பெண்களுக்கான படுக்கை வசதி கொண்ட வார்டுகள் மற்றும் புதிய கட்டில்கள் அமரும் இருக்கைகள் கதவுகள் ஜன்னல்கள் சூடான தண்ணீர் வழங்குதல் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுப்பித்தனர் இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் இதில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலரும் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.