முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெறலாம் - ஆட்சியர்
முன்னாள் படைவீரர்கள் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெறலாம்;

முன்னாள் படைவீரர் நலனுக்காக 'முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என்றும், அதுமட்டுமன்றி திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும், இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்ற அறிவிப்பினை தமிழக முதல்வர் வெளியிட்டிருந்தார். மேற்கண்டவாறு, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முன்னாள் படைவீரர்களின் வயது வரம்பு 55 வரை என தெரிவிக்கப்பட்டியிருந்தது. தற்பொழுது முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர் விதவையர்கள், சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.