இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-04-01 18:20 GMT
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
  • whatsapp icon
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் (01.04.2025) திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 57 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

Similar News