தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நாளை (ஏப்ரல்.3) தட்சிணாமூர்த்தி முன் தென்முகவேந்தன் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமை தாங்குகிறார். இதில் சிவ பக்தர்கள் பங்கேற்க குழுவினர் இன்று அழைப்பு விடுத்துள்ளனர்.