தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரம்நகரை சேர்ந்த சாந்தாராம் கடந்த 24ஆம் தேதி பாளையங்கோட்டையில் உறவினரை பார்ப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து பைக்கில் வந்தபோது கேடிசிநகர் அருகே பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதியது. இதில் சாந்தாரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.