ராமநாதபுரம் பங்குனி உத்திர காப்பு கட்டு நிகழ்வு நடைபெற்றது
பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் ஆலய 85 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி துவங்கியது, சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து காப்புக்கட்டத் துவங்கினர்.;
ராமநாதபுரத்தில் மாவட்டத்தில்பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் ஆலய 85 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி துவங்கியது, சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து காப்புக்கட்டத் துவங்கினர். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற அருள்மிகு வழிவிடு முருகன் ஆலய 85-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் காப்பு கடடும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டு 85-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாள் பல்வேறு ஆண்மீக நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக உள்ளது. அதில் முதல்நாள் நிகழ்வாக இன்று காப்பு கட்டு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகங்களுடன் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி அதிகாலை முதல் பால்குடம் மற்றும் பல்வேறு விதமான காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். ஏப்ரல் 11 அன்று இரவு பூக்குழி உற்சவம் நடைபெற உள்ளது, முதல் நாள் நிகழ்வை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் வழிவிடு முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா ஜெயகுமார் சிறப்பாக செய்து வருகிறார.