சங்கரன்கோவில் அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து

இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து;

Update: 2025-04-02 06:12 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமம் காலணி பகுதியைச் சேர்ந்த சுந்தரையா என்பவரின் மகன் சிவக்குமார் வீட்டில் கழுத்தில் சிறு சிறு காயங்களோடு உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்ட அங்குள்ளவர்கள் சின்னகோவிலாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அவரது உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் இதுகுறித்து சங்கரன்கோவில் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்குட்டு வேலவன் தலைமையிலான காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே இது கொலையா? தற்கொலையா? என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்..

Similar News