சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்ணாமலைக்கு எதிராக போஸ்டர்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு;

Update: 2025-04-02 09:54 GMT
சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், அண்ணாமலை ஆகியோர் மாறி மாறி டெல்லி சென்று வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, அதிமுக தலைமையில் தான் கூட்டணி, எடப்பாடியாரை முதல்வராக ஏற்பவர்கள் தான் கூட்டணியில் சேர முடியும் என போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News