அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட கூடிய ஆட்சி தான் இந்த 5-ஆண்டுகள் நடைபெற்று வருகிறது - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் பேச்சு
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட கூடிய ஆட்சி தான் இந்த 5-ஆண்டுகள் நடைபெற்று வருகிறது - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் பேச்சு;
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட கூடிய ஆட்சி தான் இந்த 5-ஆண்டுகள் நடைபெற்று வருகிறது - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் பேச்சு கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகள் உள்ளன. கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தலைமை யாரை முடிவு செய்து வேட்பாளராக அறிவிக்கிறார்களோ அவர்களை வெற்றி பெற வைத்து விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் . பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதை பார்த்தவுடன் சட்டத்துறை அமைச்சர் திமுகவை பார்த்து அதிமுக காப்பியடிப்பதாக தெரிவித்தார். காப்பி அடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அம்மா கொடுத்த திட்டங்களை நிறுத்த முடியாமல் லேப்டாப் வழங்கினார்கள். அதிமுக கடந்த பத்து ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு என 52 லட்சம் லேப்டாப் வழங்கப்பட்டது. தேர்தல் வரும் நேரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பெயரளவுக்கு கல்லூரி முடிந்து செல்லும் மாணவிகளுக்கு மட்டும் திமுக லேப்டாப் வழங்கி வருகின்றனர். சட்டத்துறை அமைச்சர் அவர்களே யார் திட்டத்தை யார் காப்பியடிக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என விமர்சித்தார். அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட கூடிய ஆட்சி தான் இந்த ஐந்து ஆண்டுகள் நடைபெற்று வருகிறது. அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 200 தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரம் செய்து வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு தரப்பட்டு நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால்,திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை கூட தொடங்கவில்லை நேர்காணல் இல்லை, பிரச்சாரம் இல்லை திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. கூட்டணிக்குள் விரிசல் பிரச்சனைகள் உள்ளது. அதிமுக பொருத்தவரை எந்த ஒரு விரிசலும் இல்லாமல் கூட்டணி தேர்தலை சந்திக்க தயாராகி விட்டோம் என்றார்.