நாமக்கல்லில் இன்று மாலை (பிப்ரவரி -5) அ.இ.அ.தி.மு.க. தெருமுனைப் பிரச்சாரம்: முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் அழைப்பு

விடியா ஆட்சி உங்க வீட்டு பில்லே சாட்சி என்ற விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நாமக்கல் மாநகரில் நடைபெற உள்ளது.;

Update: 2026-02-05 10:31 GMT
நாமக்கல் மாநகர அதிமுக சார்பில் 'விடியா ஆட்சி உங்க வீட்டு பில்லே சாட்சி' என்ற தலைப்பில் பிரச்சார பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்கள் இது குறித்து நாமக்கல் மாநகர அதிமுக அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, விடியா ஆட்சி உங்க வீட்டு பில்லே சாட்சி என்ற விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் இன்று மாலை நாமக்கல் மாநகரில் நடைபெற உள்ளது.
Advertisement
நாமக்கல் மாநகரம், வார்டு எண் 15, மேட்டு தெரு (மாரியம்மன் கோவில் அருகில்) இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறும் இப்பிரச்சாரத்தில், நாமக்கல் மாநகர கழக செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் எம்எல்ஏ தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இப்பிரச்சாரத்தில் மாநகர நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், மகளிர் அணி, இளைஞர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News