ராமநாதபுரம் பங்குனி குடியேற்றம் நடைபெற்றது
கமுதி முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பிரசித்தி பெற்ற ஶ்ரீமுத்து மாரியம்மன் கோவிலின் பங்குனி திருவிழா இன்று காலை காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. யானையுடன் மேள தாளங்கள் முழங்க அம்மன் கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முக்கிய திருவிழாவான பொங்கல் ஏப்ரல் 8_ம் தேதியும், அக்கினிசட்டி, தீக்குண்டம் நிகழ்ச்சி ஏப்ரல் 9_ம் தேதியும், முளைப்பாரி திருவிழா ஏப்ரல் 12_ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்காக இன்று முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கி உள்ளனர். கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீமுத்துமாரியம்மனை வழிபட்டனர்.