துபாயில் வேலை இன்றி தவிக்கும் கடையநல்லூர் இளைஞர்கள்

துபாயில் வேலை இன்றி தவிக்கும் கடையநல்லூர் இளைஞர்கள்;

Update: 2025-04-02 12:17 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அடுத்த புதுக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் துபாயில் வேலைக்கு சென்றுள்ளனர். தற்போது கடையநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு அங்கு வேலை இல்லாமல் பணமும் இல்லாமல் பிச்சை எடுத்து சாப்பிடுவதாகவும் இளைஞர்கள் கண்ணீருடன் வீடியோ பதிவிட்டு இருந்தனர். இதனை அடுத்து கடையநல்லூர் பகுதியை சேர்ந்த செல்வ கிருஷ்ணனை மீட்டு தர கோரி அவர் தாயார் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் துபாயில் தவித்து வரும் வாலிபர்களை உடனே மீட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிடம் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டுக்கு அழைத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த மனுவில் தெரிவித்தனர்.

Similar News