மயிலாடுதுறையில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு சிறப்பு முகாம்
தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் (மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன்) மின் நுகர்வோர் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.;
மயிலாடுதுறையில் வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 முதல் மாலை 5.00 மணி வரை மயிலாடுதுறை கோட்ட அளவிலான குறைதீர் சிறப்பு முகாம் உதவி செயற்பொறியாளர்/இயக்குதல் மற்றும் பராமரித்தல்/நக/மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் நகர் மேற்கு மயிலாடு துறை, நகர் கிழக்கு மயிலாடுதுறை, சோழசக்கரநல்லூர், நீடுர், திருவிழந்தூர், புறநகர் மயிலாடுதுறை, கிளியனூர், சங்கரன்பந்தல், மங்கநல்லூர், மூவலுார், கோமல், குத்தாலம், கடலங்குடி, பாலையூர், அலுவலகத்தை சார்ந்த மின் மேக்கிமங்கலம். ஆகிய பிரிவு நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது மின் கட்டணம், மின்மானி பழுது மற்றும் குறைந்த மின் அழுத்தம், மற்றும் பழுதான மின் கம்பம் . தொடர்பான குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார் .