எம்ரான் படத்தை தடை செய்ய கோரி மயிலாடுதுறையில் விவசாயிகள் போராட்டம்
மயிலாடுதுறையில் திரையிடப்பட்ட எம்புரான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். திரைப்பட நடிகர்கள் உருவப்படத்தை காலில் மிதித்து கண்டனம்:-;
பிரித்திவிராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட எம்புரான் திரைப்படத்தில் ''முல்லை பெரியாறு அணையைக் குண்டு வைத்து தகர்க்க வேண்டும்” என்ற வசனத்தை சென்சார் செய்யாத மத்திய தணிக்கை வாரியத்தை கண்டித்தும், இந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. எம்புரான் திரைப்படம் வெளியிடப்பட்ட விஜயா திரையரங்கின் முன்பு மாவட்டத் தலைவர் பண்டரிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்புரான் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், படத்தை வெளியிட்ட கோகுலம் சிட்பண்ட் உரிமையாளர் உருவப்படங்களை தரையில் போட்டு காலால் மிதித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி யும், சென்சார் செய்யாத மத்திய தணிக்கை வாரியத்தை கண்டித்து முழக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.