ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்று விழா
மீஞ்சூர் வட காஞ்சி அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்று விழா ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்;
திருவள்ளூர் மீஞ்சூர் வட காஞ்சி அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்று விழா ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது வருகிற 15.04 2025 ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது ஒவ்வொரு நாட்களும் சிம்ம வாகனம் சூரிய பிரபை பூத வாகனம் நாக வாகனம் சந்திரபிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிவபெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்முக்கிய விழாவான திருத்தேராட்டம் வருகிற 8 ஆம் தேதி நடைபெறுகிறது 11 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நிறைவு விழாவாக 15 ஆம் தேதி 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது இன்று நடைபெற்ற கொடியேற்று விழாவில் சோழவரம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.