தமிழக அரசுக்கு ஈரோடு பேட்டியா நன்றி

சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கண்காட்சிகளில்அரங்கம் அமைக்க மானியம் வழங்க ஒப்புதல்;

Update: 2025-04-03 01:15 GMT
தமிழக அரசுக்கு ஈரோடு பேட்டியா நன்றி
  • whatsapp icon
சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறையில் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கு கண்காட்சிகளில் அரங்கம் அமைக்க மானியம் வழங்க ஒப்புத்தல் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு(பேட்டியா) நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் வருகிற மே மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஆகிய 4 நாட்கள் ‘பேட்டியா பேர்-2025’ தொழிற் கண்காட்சி, ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் விற்பனை அரங்கம் அமைக்க சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு உதவிடும் வகையில், ஒன்றிய அரசு சார்பில் 60 நபர்களுக்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் மூலமாக முதல் முறையாக 50 நபர்களுக்கும் மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இது தொழில் துறை வளர்ச்சிக்கு மிக பெரும் உறுதுணையாக இருக்கும். இதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பரிந்துரைத்த வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோருக்கு எங்களது கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Similar News