அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த மார்ச் 15ஆம் தேதி மூன்று அலகுகளில் ஏற்பட்ட தீ விபத்து மூன்றாவது அலகில் பாதிப்பு சரி செய்யப்பட்டு இன்று காலை முதல் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி துவக்கம்!;

Update: 2025-04-03 03:43 GMT
அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்!
  • whatsapp icon
தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகள் மூலம் 1050 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது அலகுகள் முற்றிலும் சேதமானது மூன்றாவது அலகில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது சுமார் 18 மணி நேரம் போராடி இந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அனைத்தனர் இதைத்தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து கோடை காலம் என்பதால் உடனடியாக மின்சார உற்பத்தியை துவங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர் இதைத்தொடர்ந்து குறைவான சேதமடைந்த மூன்றாவது அலகு உடனடியாக சரி செய்யப்பட்டு சுமார் 17 நாட்களுக்குப் பின்பு இன்று காலை முதல் மூன்றாவது அலகு மூலம் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் பணி துவங்கி உள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மூன்று நான்கு ஐந்து அலகுகள் மூலம் சுமார் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது முதலாவது மற்றும் இரண்டாவது அலகுகள் தீ விபத்தில் சேதமானதை தொடர்ந்து 420 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இந்த இரண்டு அலகுகளையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து மின் உற்பத்தியை துவங்க வேண்டுமென மின்வாரிய தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News