சங்கரன்கோவிலில் பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டு சென்ற அரசு பேருந்து

பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டு சென்ற அரசு பேருந்து;

Update: 2025-04-03 06:39 GMT
சங்கரன்கோவிலில் பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டு சென்ற அரசு பேருந்து
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் இறக்கி விடாமல் பாதி வழியில் இறக்கி விட்டதால் தங்கவேல் என்ற பயணி நடத்துடனரிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பேருந்தை நடத்துனர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்வோம் என கூறினார். பின்னர் பேருந்து வேகமாக நீண்ட தூரம் சென்றதால் பேருந்தில் வாக்குவாதம் செய்து கொண்டு சென்ற பயணிகளால் திரும்ப பேருந்து நிலையம் வந்து பயணிகளை இறக்கி விட்டு சென்றது. அரசு பேருந்து பயணிகளை பேருந்து நிலையம் சென்று இறக்கி விடாமல் பாதி வழியில் இறக்கி விட்டதால் பயணிகள் வாக்குவாதத்தை தொடர்ந்து அரசு பேருந்து திரும்பி பேருந்து நிலையம் வந்த சம்பவம் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Similar News