பரிமள ரங்கநாதர் கோயில் கொடியேற்றம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்:- சிகர விழாவான தேர்த்திருவிழா மற்றும் தீர்த்தவாரி ஏப்ரல் 11-ஆம் தேதியும், தெப்ப உற்சவம் ஏப்ரல் 22-ஆம் தேதியும் நடைபெறுகிறது;

Update: 2025-04-03 07:41 GMT
  • whatsapp icon
பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றானதும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது தலமுமான மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, கோயில் மண்டபத்தில் உற்சவமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு கோயிலின் முன்பு உள்ள கொடி மரத்தில் பட்டாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலர் ரம்யா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பத்து நாள் உற்சவத்தில் தினசரி சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. சிகர விழாவான திருத்தேர்விழா மற்றும் தீர்த்தவாரி உற்சவம் ஆகியன ஒன்பதாம் திருநாளான ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவின் மற்றொரு முக்கிய உற்சவமான தெப்ப உற்சவம் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Similar News