மயிலாடுதுறையில் ஒரு சில இடங்களில் சாரல் மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழைவெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.;
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்தவரை நேற்று முற்றிலுமாக மழை இல்லாத நிலையில், இன்று காலை 10 மணி அளவில் திடீர் என வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, ஒரு சில இடங்களில் தூறல் மழை மட்டும் இருந்தது. மதியம் ஒன்றரை மணிக்கு மேல் வானம் கார் மேகங்கள் சூழ்ந்து மயிலாடுதுறை, குத்தாலம், தேரழந்தூர், கோமல், செம்பனார்கோவில், பொறையார், தரங்கம்பாடி, மணல்மேடு உள்ளிட்ட மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் தூரல் மட்டும் உள்ளது. இந்த திடீர் மழை காரணமாக வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இருந்தது. மதியம் ஒன்றரை மணிக்கு மேல் வானம் கார் மேகங்கள் சூழ்ந்து மயிலாடுதுறை, குத்தாலம், தேரழந்தூர், கோமல், செம்பனார்கோவில், பொறையார், தரங்கம்பாடி, மணல்மேடு உள்ளிட்ட மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் தூரல் மட்டும் உள்ளது.