அனைத்து துறை ஓய்யூதியர் சங்க ஆர்ப்பாட்டம்
இந்திய அரசின் 8வது ஊதியக்குழு நிதிஅறிக்கையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு எடுத்துள்ள துரோகத்தை கண்டித்துஅனைத்து துறை அரசு ஊழிய ஓய்வூதியர் சங்கத்தினர் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். ;
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் மத்திய மாநில பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர் அமைப்பினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு எட்டாவது ஊதியக்குழு நிதி மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றி இருப்பதை கண்டிப்பதாகவும் எட்டாவது ஊதியக்குழு நிதி மசோதா அறிக்கை வெளிவந்த நாளுக்கு பின்னர் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த மசோதாவின் படி பணப்பயன் கிடைக்கும் என்றும் இந்த ஊதியக்குழு அறிக்கைக்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன் ஏதும் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த முறையை கண்டிப்பதாகவும் உடனடியாக அதை திரு பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து கண்டன முழுக்கங்களை எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில்நூற்றுக்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.