விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நபர் தூக்கு போட்டு தற்கொலை மயிலாடுதுறை போலீசார் விசாரணை;

Update: 2025-04-03 09:56 GMT
  • whatsapp icon
. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வாணாதிராஜபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் செல்வம் (60). விவசாயியான இவர் வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு அண்மைக்காலமாகதீராத வயிற்று வலி இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வலி அதிகமானதை தொடர்ந்து அவர் காதில் விஷ மருந்தை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் செல்வத்தை மீட்டு மயிலாடுதுறை மாவட்ட அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்ற செல்வம், கழிவறையில் உள்ள கம்பியில் துண்டால் தூக்கிட்டு, உயிரிழந்த நிலையில் தொங்கி உள்ளார். சிறிது நேரம் கழித்து கழிவறைக்கு சென்றவர்கள் செல்வம் தூக்கிட்டு நிலையில் இழந்து கிடந்ததை கண்டு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். இத எடுத்து அவரது உடல் சவக்கிடங்கில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News