ஐஸ் வியாபாரி மீது தாக்குதல்: இளைஞர் கைது!

சாத்தான்குளம் அருகே ஐஸ் வியாபாரியை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-04-03 10:14 GMT
ஐஸ் வியாபாரி மீது தாக்குதல்: இளைஞர் கைது!
  • whatsapp icon
சாத்தான்குளம் அருகே ஐஸ் வியாபாரியை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜாசிங் (60). ஐஸ் வியாபாரியான இவர் நேற்று கோமானேரி பகுதியில் ஐஸ் வியாபாரத்தை முடித்து விட்டு அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த அதே ஊரைச் சேர்ந்த இசக்கிபமுத்து மகன் பரமசிவம் (37) என்பவர் ராஜாசிங்கிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் பரமசிவன், ராஜாசிங்கை தாக்கினாராம். இதில் காயமடைந்த ராஜாசிங் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜாசிங் அளித்த பகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் வழக்குபதிந்து பரமசிவத்தை கைது செய்தார்.

Similar News