ராமநாதபுரம் பாராளுமன்றத்தில் தர்மர் எம்பி கேள்வி
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் தமிழக மீனவர்கள் பயன் அடைகிறார்களா? பாராளுமன்றத்தில் தர்மர் கேள்வி;
ராமநாதபுரம் மாவட்டம்கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் தமிழக மீனவர்கள் பயன் அடைகிறார்களா? பாராளுமன்றத்தில் தர்மர் கேள்வி மாநிலங்களை உறுப்பினர் ஆர்தர்மர் கூறியதாவது:மத்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை மீனவர்கள் குறிப்பாக நிதி நிலைமை காரணமாக பிணையம் வழங்க முடியாதவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாமா அவ்வாறு பயன்பெறாதவர்களுக்கு மத்திய அரசு என்னநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுஎன நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி பேசினேன். அதற்கு 2018 19 ம் ஆண்டில் மத்திய அரசு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை ஏற்படுத்தியது. அதன் மூலம் மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வங்கி கணக்குகள், கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் மூலம் ரூ. 2 லட்சம் வரை கடன் பெற்று பயனடையலாம். 7 சதவீதம் வட்டி மானிய விதத்தில் இது வழங்கப்படுகிறது. இதை எளிமையாக்க முன்கூட்டியே வட்டி மானியம் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. சரியான பான குறிப்பிட நேரத்தில் கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு 3 சதவீதம் உடனடியாக திரும்ப செலுத்தி ஊக்கத்தொகையும் பெறுகின்றனர்.மேலும் கடனை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு ரூ.2 லட்சத் திலிருந்து ரூ.5 லட்சம் வரை மீனவர்கள், விவசாயிகள், பதப்படுத்துபவர்கள் மீன் வள பங்குதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகள் சிரமங்களை குறைப்பதற்காக கிசான் கார்டு திட்டத்தின் மூலம் கடன் பெற ஜனவரி 2025 முதல் பிணையம் இல்லாத கடனுக்கான வரம்பை ரூ.1.60 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியுள்ளது. என மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் சிங்க் பதிலளித்து உள்ளார். என கூறினார்.