மிரட்டி பணம் பறித்தவர் கைது

பெருந்துறை அருகே பரபரப்பு பெண் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தவரை மிரட்டி பணம் பறித்தவர் கைது;

Update: 2025-04-05 06:18 GMT
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் சம்பவத்தன்று காரில் வாலிபர் ஒருவர் தனது பெண் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பவானி, சேவாக்கவுண்டனூரை சேர்ந்த சுப்பிரமணி (39) என்பவர் தனது மோட்டார் சைக்கிள் அந்த வழியாக வந்து அவர்கள் காரின் முன்பு நிறுத்தி பெண் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த நபரை மிரட்டி உள்ளார். அந்த நபரிடம் இருந்த ரூ.1,150 - ஐ பறித்துக் கொண்டார். மேலும் அந்த நபரின் செல்போனில் கூகுள் பேன் மூலம் ரூ.1000 பறித்துக் கொண்டார். பின்னர் சுப்பிரமணி அங்கிருந்து சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து அந்த வாலிபர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News