வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து மயிலாடுதுறையில் தவெக. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ; 500 மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்:- போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் போலீசாருடன் கடும் வாக்குவாதம்;
. வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டம் இயற்றி உள்ளது . இந்த சட்டம் இஸ்லாமியர்கள் உரிமைகளை பறிப்பதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். அந்த வகையில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர பொறுப்பாளர் முகமது ஆசிப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குட்டி.கோபிநாத் கலந்து கொண்டு மத்திய அரசின் வக்ஃப் திருத்தசட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். இதில் 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெக வினர் சாலையில் நடுவே நின்று கோஷங்களை எழுப்பியதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சாலையில் ஒரு புறம் நின்று ஆர்ப்பாட்டம் செய்ய கேட்டுக் கொண்டனர். அப்போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.