ராமநாதபுரம் பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த பின் பிரதமர் பேச்சு

தமிழகத்துக்கு நிதி தந்தும் அழுகிறார்கள் அவர்கள் அழுது கொண்டே இருக்கட்டும், மேடையில் தங்கம் தென்னரசை வைத்துகொண்டே திமுகாவை விமர்சித்த மோடி;

Update: 2025-04-06 13:44 GMT
ராமநாதபுரம் மாவட்டம்பாம்பன்-மண்டபம் இடையே ராமேஸ்வரத்தை இந்தியாவுடன் இணைக்கும் நாட்டிலேயே முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் விழுந்ததாலும், இந்த பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிளுக்கு 2019 ஆண்டு ரயில்வே மானியக் கோரிக்கைகளின் போது பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 01.03.2019ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். பின்னர் 11.08.2019ல் பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்காகப் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின. செப்டம்பர் 2024ல் பணிகள் நிறைவடைந்தது. ராமநவமி இன்று பகல் 12 மணியளவில் இலங்கை பயணத்தை நிறைவு செய்து விட்டு மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.550 கோடி செலவில் பாம்பன்-மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை கொடி அசைத்து வைத்து திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மண்டபத்திலிருந்து புறப்பட்டு வந்த சிறப்பு ரயில் ராமேசுவரத்திற்கு சென்றது. மேலும், ரிமோட் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து பாலத்தை மேலே உயர்த்தி கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் பாலங்களை கடந்து செல்வதையும், பாலத்தின் செயல்பாடுகளையும் பிரதமர் பார்வையிட்டார். அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். பிரதமர் வந்தபோது பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரத்தில் சாலைகளின் இரு புறங்களிலும் மக்கள் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் ராமநாதசுவாமி, பர்வதவர்தினி அம்பாள் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்து, பிரகாரத்தில் வலம் வந்தார். பின்னர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பாம்பன் பாலம் திறப்பு விழாவில் ராமேஸ்வரம்-தாம்பரம் தினசரி விரைவு ரயிலை துவங்கி வைத்தார். மேலும், 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு-ஆந்திரபிரதேச எல்லையில் அமைந்துள்ள தே.நெ.எண்.40ல் வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை பகுதியில் 4 வழிச்சாலை, விழுப்புரம் - புதுச்சேரி பகுதி தே.நெ.எண்.332ல் உள்ள 4 வழிச்சாலை, பூண்டியன்குப்பம் - சட்டநாதபுரம் பகுதி தே.நெ.எண்.32ல் உள்ள 4 வழிச்சாலை, சோழபுரம் - தஞ்சாவூர் பகுதி தே.நெ.எண்.36ல் உள்ள 4 வழிச்சாலை ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், புனிதமான ராமநவமி நாளான இன்று அனைவருக்கும் எனது இதயபூர்வமான ராமநவமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்டபோது, ஆசிகள் நிரம்பப்பெற்றவனாய் உணர்ந்தேன். இந்த நன்னாளில் ரூ.8,300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அர்ப்பணிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ராமேஸ்வரம் பாரத ரத்னா டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் பூமி. அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என்று அவரது வாழ்க்கை நமக்கு காட்டுகிறது. அதேபோல, ராமேஸ்வரத்தின் இந்த புதிய பாம்பன் பாலம், தொழில்நுட்பத்தையும் பாரம்பரித்தையும் ஒன்று சேர்க்கிறது. பாம்பன் புதிய பாலத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் ரயில் பாலம்தான், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம். இதற்கடியிலே பெரிய கப்பல்களாலும் பயணத்தை மேற்கொள்ள முடியும். ராமேஸ்வரத்திலிருந்து பிற பகுதிகளுக்கு இடையிலான இணைப்பினை இந்த பாலம் ஏற்படுத்துவதுடன், தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகங்களுக்கு பயனுள்ளதாக அமையும். கடந்த பத்தாண்டுகளில் ரயில், சாலை, விமான நிலையம், துறைமுகங்கள், மின்னாற்றல், நீர், எரிவாயுக் குழாய்கள் போன்ற கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டை ஆறு மடங்கு உயர்த்திருக்கிறோம். நாட்டின் மெகா திட்டங்களின் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. வடக்கில் ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றும், மேற்கில் மும்பையில் நாட்டின் மிக நீளமான கடல் பாலமான அடல் பாலமும் இதில் அடக்கம். வளர்ச்சியைடந்த பாரதம் நோக்கிய பயணத்தில், தமிழ்நாட்டுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொருத்து, பாரதத்தின் வளர்ச்சியும் விரைவாகும். முன்பிருந்த அரசைவிட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அதிகளவில் உதவி புரிந்துள்ளது. திமுக அங்க வைத்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழகத்துக்கு அதிக நிதி தந்துள்ளோம் கடந்த 10 ஆண்டுகளிலே, தமிழ்நாட்டின் ரயில்வே துறை பட்ஜெட்டில் 7 மடங்குக்கும் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்த பின்னரும் சிலர் அழுதுகொண்டே இருக்கின்றனர். அவர்களால் அழ மட்டுமே முடியும்; அவர்கள் அழுதுவிட்டு போகட்டும். தமிழ்நாட்டிலுள்ள 77 ரயில் நிலையங்களையும் நவீனப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் ராமேஸ்வரம் ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது. 2014-க்கு பிறகு, மத்திய அரசின் உதவியோடு தமிழ்நாட்டில் 4,000 கி.மீ. அளவில் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று அடிக்கல் நாட்டப்பட்டு மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரத்தினுடனான இணைப்பையும் மேம்படுத்தும். மீனவர்களின் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கிறது; மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 3,700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு வடத்தில் 600 மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு சில தலைவர்கள் எனக்கு கடிதம் எழுதுவது உண்டு அந்த கடிதங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் குறைந்தபட்சம் கையெழுத்தாவது தமிழில் இருக்க வேண்டமா என கேள்வி எழுப்பினார். கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள ஏழை,எளிய 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கிடைத்திருக்கின்றன. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள், ஏழை, எளியோருக்கு கிடைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் 12 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக குழாய்வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1 கோடியே 11 லட்சம் குடும்பங்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இதனால், நமது தாய்மார்களும் சகோதரிகளும் பெரும் ஆதாயமடைந்திருக்கிறார்கள், என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், செய்தி ஒலிபரப்பு இணையமைச்சர் முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி, தர்மர் எம்.பி, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News