வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பிரதமர் நரேந்திரமோடியின் வருகையை கண்டித்து மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்:-;

Update: 2025-04-06 14:03 GMT
  • whatsapp icon
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாட்டு வருகைக்கு அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடியேந்தி எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு மாநில செயலாளர் அறிவுறுத்தி இருந்தார். அந்த வகையில் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்ப் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்தது, 100 நாள் வேலை  திட்டத்துக்கு ரூ.4000 கோடி நிதி வழங்காதது, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதிகளை தராமல் வஞ்சித்தது ஆகிய விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் 100 க்கு மேற்பட்டோர் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமையில் கைகளில் கருப்பு கொடி ஏந்தி நரேந்திர மோடிக்கு எதிராக நமுழக்கங்களை எழுப்பி கண்ட ன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Similar News