பாலம் வேண்டி போராட்டம் எம்பி நேரில் ஆலோசனை
காவிரி ஆற்றின் குறுக்கே இடிந்துவிட்ட பாலத்தை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தி காலையில் பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மாலையில் உடனடியாக பார்வையிட்டு பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்த மக்களவை உறுப்பினர்:-;
மயிலாடுதுறை நகராட்சி கூறைநாடு திருமஞ்சன வீதியிலிருந்து காவிரி ஆற்றை கடந்து வடகரையில் உள்ள ஒன்னாவது வார்டுக்கு செல்ல 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பாலம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விட்டது அதை கட்டிக் கொடுக்க அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் பாலம் கட்டுவது நகராட்சி நிர்வாகமா அல்லநு பொதுப்பணித்துறையா என்ற போட்டி இருப்பதால் எந்த நடவடிக்கையும் இல்லை . நேற்று காலை இடிந்த பாலம் உள்ள இடத்தில் அப்பகுதியைசேர்ந்த100க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆற்றில் இறங்கிபோராட்டம் நடத்தினர். இதை கேள்விப்பட்ட மயிலாடுதுறை எம்பி சுதா நேற்று மாலை போராட்டம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு விரைவில் இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறேன் என அப்பகுதி மக்களிடம் நம்பிக்கை தெரிவித்தார். நேரில் வந்து எம்பி ஆறுதல் கூறியதால்மக்கள் திருப்தியாக சென்றனர்.